கொளத்தூரில் வேட்பாளர் பெயரை மாற்றி கூறிய விஜய்.. பாபு-ஆ பிரபு- ஆ? குழம்பிய தொண்டர்கள்!

 
1

தவெக தலைவர் விஜய் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். சென்னை பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் பெரம்பூரில் தன் முதல் பிரச்சாரத்தை தொடங்கினார். பெரம்பூரை தொடர்ந்து கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் செய்தார்.கொளத்தூரில் அளவுக்கு அதிகமான கூட்டம் கூடியதால் போலீசார் கூறியதை அடுத்து 2 நிமிடங்களில் விஜய் பேச்சை முடித்துக்கொண்டார்.கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் போலீஸ் அனுமதித்த இடத்திற்கு 100 மீட்டர் முன்பே விஜய் வாக்கு சேகரித்தார்.


கொளத்தூரில் விஜய் பேசும்போது, அத்தொகுதி தவெக வேட்பாளர் ‘பாபு’ என்பதற்கு பதிலாக ‘பிரபு’ என மாற்றி கூறினார். இதனால் அங்கிருந்த தவெக தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.காரணம், பிரபு என்பவர் தவெக சார்பில் மாதாவரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதுமட்டுமின்றி கொளத்தூரில் சில நிமிடங்கள் மட்டுமே பேசினார் விஜய்.அசம்பாவிதம் தவிர்க்க போலீசார் அறிவுரையை ஏற்று 2 நிமிடங்களில் விஜய் பேச்சை முடித்துக்கொண்டார்..

பெரம்பூர், கொளத்தூரை தொடர்ந்து வில்லிவாக்கத்தில் பிரச்சாரம் செய்யப்பட இருந்த நிலையில் வில்லிவாக்கத்தில் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.பாதுகாப்புக் காரணம் கூறி ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.