ஏப்ரல் முதல் வாரத்தில் விஜய் பிரச்சாரம்!

 
vijay

ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். 

vijay

ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து   தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்  தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். அவர் பிரச்சாரம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செங்கோட்டையன் அவர் செய்து முடித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எங்கு பிரச்சாரம் தொடங்க வேண்டும், எங்கு முடிக்க வேண்டும் என அனைத்து விதமான ஏற்பாடுகளையும் செங்கோட்டையன் செய்திருக்கிறார். ஏனென்றால் அவர் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா  சுற்றுப்பயணத்தை வடிவமைத்திருக்கிறார். அதனால் அவர்களுக்கு எங்கு சுற்று பயணத்தை தொடங்க வேண்டும், எங்கே முடிக்க வேண்டும் என்பதெல்லாம் நன்றாகவே தெரிந்த நிலையில் செங்கோட்டையன் அதை கவனித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். எந்த ஒரு வேட்புமனுவும் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்ய முடியாத அளவிற்கு தயார் செய்ய வேண்டும். ஒரு வாரத்தில் தேர்தலுக்கான வேட்பாளர் உறுதிமொழி பத்திரத்தை தயார் செய்து தலைமை கழகத்தில் அளிக்க வேண்டும். அனைத்து பணிகளை மேற்கொள்ள மாவட்ட செயலாளர்கள் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.