#BREAKING விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் 30ஆம் தேதி பெரம்பூர், வில்லிவாக்கம் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே (26/03/26) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது. ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டன. இதனால் அதிருப்தியடைந்த தவெக தலைவர் விஜய், தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து, இதுதொடர்பாக மனு ஒன்றை கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் 30ஆம் தேதி பெரம்பூர், வில்லிவாக்கம் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுளது. மார்ச் 30ஆம் தேதி மதியம் பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்யும் விஜய், பெரம்பூர் தொகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

