எம்ஜிஆர் சாதனையை முறியடித்த விஜய்!

 
விஜய் பிரச்சாரத்துக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல்

சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகம், எம்ஜிஆரின் சாதனையை அரை நூறறாண்டுக்கு பிறகு முறியடித்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தவெக 110 தொகுதிகளில் முன்னிலை பெற்று சாதனை படைத்துள்ளது. 1977ல் அதிமுக சந்தித்த முதல் தேர்தலில் 33.5% வாக்குகள் பெற்ற நிலையில் விஜய் தலைமையிலான தவெக முதல் தேர்தலிலேயே 34.8% வாக்குகள் பெற்று எம்ஜிஆர் சாதனை முறியடித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் நான்கு மணி தரவுகள் படி தமிழக வெற்றி கழகம் மொத்தம் பெற்றுள்ள வாக்கு சதவிகிதம் சுமார் 35. இது எம்ஜிஆர் தனியாக கட்சி தொடங்கி சந்தித்த முதல் தேர்தலில் பெற்ற வாக்கு சதவிகிதமான 33 சதவீதத்தை விட அதிகம். இதன்மூலம் தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை தவெக தலைவர் விஜய் தொடங்கிவைத்துள்ளார்.