#BREAKING விஜயின் சொத்து மதிப்பு ரூ.404 கோடி
தவெக தலைவர் விஜயின் சொத்து மதிப்பு ரூ.404 கோடி என வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யின் அசையும் சொத்து மதிப்பு ரூ.404 கோடி என வேட்புமனுவில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் விஜய் குறிப்பிட்டுள்ளார். மேலும் அசையா சொத்துக்கள் ரூ.115 கோடிக்கு உள்ளன. விஜய்யின் மனைவி பெயரில் ரூ.15 கோடி மதிப்பில் அசையும் சொத்துக்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, விஜய்யின் மனைவி சங்கீதா பெயரில் 3 கிலோ தங்கம் இருப்பதாகவும் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, விஜயின் மனைவி சங்கீதாவின் பெயரில் இந்தியன் வங்கியில் சுமார் 25 கோடி ரூபாயும் ஆக்ஸிஸ் வங்கி கணக்கில் சுமார் 40 கோடி ரூபாயும் வைப்புத் தொகையாக இருப்பதாகவும் எச்டிஎப்சி வங்கிக் கணக்கில் 20 கோடி ரூபாயும் வைப்புத் தொகையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 391 சவரன் தங்க நகைகளும் அவரது பெயரில் இருப்பதாகவும் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

