பதவியேற்பு விழாவுக்கு விஜய் வருகை

 
ஹ்

சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவுக்கு தவெக தலைவர் விஜய் வருகை தந்தார். 

ச்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிந்து வெற்றி அறிவிப்புகள் வெளியான நிலையில் 100-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தினர் பெரும்பான்மை நிருபிக்க முடியாமல் ஆட்சி அமைக்க தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக ஆதரவளித்த நிலையில் இன்று காலை 10 மணி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தவெக தலைவர் முதலமைச்சராக பதவியேற்க்க உள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு தவெக தலைவர் விஜய் தனது நீலாங்கரை இல்லத்தில் இருந்து நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு பலத்த போலீசார் பாதுகாப்புடன் புறப்பட்டு சென்றார். தமிழ்நாட்டின் 14 ஆவது முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்