"விஜய் + அதிமுக + பாஜக இணைந்தால் 200 தொகுதிகளில் வெற்றி" - தமிழருவி மணியன் புதிய கணக்கு..!
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழருவி மணியன் தனது காமராஜர் மக்கள் கட்சியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழருவி மணியன் கூறியதாவது:
ரஜினியிடம் பேசியதில் ஒரு கோப்பை மிளகு ரசமே கிடைத்தது. 3 ஆண்டுகளாக ரஜினியுடன் மாற்று அரசியல் பேசியதில் 3 கோப்பை மிளகு ரசமே கிடைத்தது. கணிசமாக வாக்கு உள்ள விஜய் சிந்திக்க வேண்டும். வெறும் 20 சதவீத வாக்குகளை வைத்து முதல்அமைச்சராக முடியாது. பாஜக, அதிமுகவின் 41 சதவீத வாக்குகளுடன் விஜய்யும் இணைந்தால் தமிழகத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெறலாம். நமது ஒரே நோக்கம் திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். தமிழ்நாட்டு மக்கள் நலன் கருதி விஜய், முதல் அமைச்சர் கனவை தியாகம் செய்துவிட்டு தமாகா அணிக்கு வர வேண்டும்" என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.


