வகுப்பறையில் குறட்டை விட்டு தூங்கிய ஆசிரியை: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ!

 
1

மத்திய பிரதேச மாநிலம், சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கடாரி அரசு தொடக்கப் பள்ளியில் (Government Primary School Kadari, Chhatarpur) பணியாற்றும் ரேகா மானவ் என்ற ஆசிரியை, வகுப்பறையில் சுகமாகத் தூங்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிவேகமாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், பள்ளியின் வகுப்பறைக்குள் பாடம் நடத்த வேண்டிய நேரத்தில், ரேகா மானவ் என்ற ஆசிரியை எதைப் பற்றியும் கவலைப்படாமல் சுகமாகத் தூங்கிக் கொண்டிருப்பதை தெளிவாகக் காண முடிகிறது.

மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் பொறுப்பில் இருக்கும் ஆசிரியரே இப்படி பொறுப்பில்லாமல் வகுப்பறையில் தூங்குவது பெற்றோர் மற்றும் நெட்டிசன்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நெட்டிசன்கள் பலரும், "துறை ரீதியான விசாரணை அல்லது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட ஆசிரியை தனக்கு 'உடல்நலம் சரியில்லை' என்று வழக்கமான ஒரு காரணியைக் கூறி தப்பிக்க முயற்சிப்பார்" எனச் சமூக வலைத்தளங்களில் காட்டமாக விமர்சித்து வருகின்றனர். அரசுப் பள்ளிகளில் நிலவும் இத்தகைய அலட்சியப்போக்கு குறித்து கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.