வருகிற 23ம் தேதி வெளியாகிறது ”விடாமுயற்சி”? அஜித் கொடுத்த அப்டேட்!

 
vidamuyarchi

வருகிற 23ம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வித்தியாசமான முயற்சிகளுக்கு பெயர் பெற்ற மகிழ் திருமேனி நடிகர் அஜித்தை வைத்து ஹாலிவுட்டின் 'Breakdown' திரைப்படத்தை தழுவி எடுத்திருக்கிறார். இதனால் 'விடாமுயற்சி' திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. மகிழ் திருமேனி விடாமுயற்சியை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்து வருகிறார்.விடாமுயற்சி டீசர் கடந்த மாதம் வெளியானது. அதில், 'பொங்கல் 2025'இல் படம் ரிலீஸ் என குறிப்பிடப்பட்டிருந்தது.  விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  

இந்த நிலையில், வருகிற 23ம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நடிகர் அஜித் குமார் ரேஸ் களத்தில் இருந்து அப்டேட் கொடுத்துள்ளார். அதாவது, என்னுடைய இரு படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. ஒரு படம் ஜனவரியிலும் மற்றொரு படம் ஏப்ரல் அல்லது மே மாததிலும் ரிலீஸாகும் என கூறியுள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.