விடாமுயற்சி படப்பிடிப்பு நிறைவு- ரிலீஸ் தேதி அறிவிப்பு
‘விடாமுயற்சி’ படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்ற நிலையில், நடிகர் அஜித்குமாருக்கு இயக்குநர் மகிழ் திருமேனி நன்றி தெரிவித்துள்ளார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் , அனிருத் இசையில் , அஜித்குமார் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனையடுத்து அஜித்குமாருக்கு அப்படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி நன்றி தெரிவித்துள்ளார். "அஜித் சார்" உங்களது அன்புக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி என இயக்குநர் மகிழ் திருமேனி கூறியுள்ளார். விடாமுயற்சி பொங்கல் 2025 ரிலீஸ் என்பதையும்
படக்குழு உறுதி செய்துள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் தன்னுடைய 62-வது திரைப்படமான விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். விடாமுயற்சி படப்பிடிப்பானது அஜர்பைஜானில் நடைபெற்றது.மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க திரிஷா மற்றும் துணை நடிகையாக ப்ரியா பவானி சங்கர் நடித்து உள்ளனர்.