#BREAKING : நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக வெற்றி..!

 
1

த.வெ.க தலைவர் விஜய் இன்று சட்டசபையில் தனது ஆதரவை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சட்டசபை முதல் நாளில், தற்காலிக சபாநாயகர், 2-வது நாளில், நிரந்தர சபாநாயகர், துணை சபாநாயகர் நியமிக்கப்பட்ட நிலையில், 3-வது நாள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. 

 

பேரவையின் அனைத்து கதவுகளும் சாத்தப்பட்டன. பேரவை 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவாக வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

ஆதரித்தோர் 144 
எதிர்ப்பு தெரிவித்தோர் - 22 
நடுநிலை -05

நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் த.வெ.க. அரசு வெற்றி பெற்றது.

சட்டப்பேரவையில் தவெக அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 144 பேரும், அரசுக்கு எதிராக (EPS அணி) 22 பேரும், நடுநிலையாக 5 பேரும் வாக்களித்தனர். இதனால், 144 என்ற பெரும் ஆதரவுடன் விஜய் அரசு தனது பெரும்பான்மையை அவையில் நிரூபித்துள்ளது.