துணை குடியரசு தலைவர், உள்துறை அமைச்சர் நாளை சென்னை வருகை! வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை

துணை குடியரசு தலைவர், உள்துறை அமைச்சர் நாளை சென்னை வரவுள்ளதை அடுத்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் 31.01.2025 அன்று சென்னை வருவதைக் கருத்தில் கொண்டு, வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் போக்குவரத்து இயக்கத்தினை சுமூகமாகவும், தாமதத்தை குறைப்பதை உறுதி செய்வதற்காகவும் மதியம் 14.00 மணி முதல் இரவு 22.00 மணிவரை பின்வரும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
* சென்னை விமான நிலையத்திலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு (ECR) செல்லும் வாகன ஓட்டிகள், பழைய மகாபலிபுரம் சாலையை (OMR) மாற்றுப் பாதையாகப் பயன்படுத்தி தங்கள் இலக்கை அடையலாம்.
* குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து வணிக வாகனங்களும் விமான நிலையம் முதல் ECR வரை உள்ள சாலையைப் பயன்படுத்த தடை விதிக்கப்படும்
பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளது.