“நான் ரெடி! நீங்க ரெடியா?"- இளைஞர்களுடன் கலக்கும் #VibeWithMKS
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய டிஜிட்டல் தொடரான 'வைப் வித் எம்.கே.எஸ்' என்ற நிகழ்ச்சியில் இளைஞர்களுடன் கலந்துரையாடுகிறார். இதுதொடர்பான டீசர் இன்று வெளியாகி சமூகவலைதளவாசிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய டிஜிட்டல் தொடரான 'வைப் வித் எம்.கே.எஸ்' என்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுடன் கலந்துரையாடுகிறார். இதுதொடர்பான டீசர் இன்று வெளியாகி சமூகவலைதளவாசிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது. முதலாவது VibeWithMKS நிகழ்ச்சியில் இளம் விளையாட்டு வீரர்களுடன் உரையாடுகிறார். இனி வரும் நாட்களில் இந்த கலந்துரையாடல், பல்வேறு பின்னணிகளைக் கொண்ட இளைஞர்களை ஒன்றிணைத்து, அவர்களின் அனுபவங்கள், லட்சியங்கள் மற்றும் உண்மைக் கதைகளை கேட்டறிவார் என சொல்லப்படுகிறது. அடுத்த தலைமுறையின் கனவுகளைப் பிரதிபலிக்கும் மக்கள் சார்ந்த உரையாடல்களை மையமாகக் கொண்டதாக இந்நிகழ்ச்சிகள் அமையும் எனக் கூறப்படுகிறது.
#VibeWithMKS தமிழ்நாட்டில் முதல்முறையாக நடக்கும் நிகழ்வு.
— Top Tamil News (@toptamilnews) December 22, 2025
தமிழ்நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுடன் உரையாடும் முதலமைச்சர் மு க ஸ்டாலின். #MKStalin #UdhayanidhiStalin#DMK pic.twitter.com/4qMQGVFykk
#VibeWithMKS தமிழ்நாட்டில் முதல்முறையாக நடக்கும் நிகழ்வு.
— Top Tamil News (@toptamilnews) December 22, 2025
தமிழ்நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுடன் உரையாடும் முதலமைச்சர் மு க ஸ்டாலின். #MKStalin #UdhayanidhiStalin#DMK pic.twitter.com/4qMQGVFykk
இந்நிகழ்ச்சி பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “Discipline, Confidence மற்றும் Character-ஐ உருவாக்குவது Sports! அப்படிப்பட்ட Young Champions-கூட Passion, Pressure, Perseverance பற்றி என்னோட உரையாடல்... நான் ரெடி! நீங்க ரெடியா!” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.


