அமமுக வெற்றிவேல் உடல்நிலை மிகவும் மோசம்!
Oct 15, 2020, 18:16 IST1602765990000
முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேலின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவிலிருந்து வெளியேறியவர் முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல். இவர் தற்போது அமமுக பொருளாளராக உள்ளார். கட்சி பணிகளை தீவிரமாக செய்து வந்த இவருக்கு காய்ச்சல், சளித் தொல்லை இருந்துள்ளது. இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதை தொடர்ந்து வெற்றிவேல் கடந்த 6-ஆம் தேதி போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் வெற்றிவேலுக்கு வெண்டிலேட்டர் மற்றும் செயற்கை சுவாசக் கருவிகள் உதவியுடன் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையில் மாற்றமில்லை என்றும் மிகவும் மோசமாகிவருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.