இன்று தொடங்குது ‘வெற்றி தமிழ்நாடு 2026’! முதலீடுகளைக் குவிக்க தொழில் துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
தொழில் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய்யைச் சந்தித்து, இன்று நடைபெறவுள்ள ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ தொடர்பான பணிகளை விளக்கி, மாநாட்டைத் தொடங்கி வைத்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பு விடுத்தேன்.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்குபவர்கள் ஒன்றிணையும் முக்கிய தளமாக இம்மாநாடு அமையவுள்ளது.
தமிழ்நாட்டின் மீது உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, ஒவ்வொரு முதலீட்டையும் மக்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்பாக மாற்றும் நமது பயணத்தில், ‘வெற்றி தமிழ்நாடு 2026’ ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களைச் சந்தித்து, நாளை நடைபெறவுள்ள ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ தொடர்பான பணிகளை விளக்கி, மாநாட்டைத் தொடங்கி வைத்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பு விடுத்தேன்.
— Virudhai Magal Keerthana (@Keerthana4VNR) August 12, 2026
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த… pic.twitter.com/QGuWsoeKRQ

