தவெக நிகழ்ச்சியில் இணைந்த இயக்குனர் வெற்றிமாறன்
Feb 2, 2025, 13:53 IST1738484638263

தமிழக வெற்றிக் கழகம் இரண்டாவது ஆண்டு தொடக்க விழா இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் இயக்குனர் வெற்றிமாறன் பங்கேற்றார்.
மதுரை மாவட்டம் அழகர் கோவில் சாலையில் மாத்தூர் விளக்கில் மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. சிறிய மாடு பெரிய மாடு என இரண்டு பிரிவாக போட்டிகள் நடைபெற்றது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி எங்களோடு இணைந்த இயக்குனர் #வெற்றிமாறன் அவர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக நன்றிகளும், வாழ்த்துக்களும் 🤗.#TVKFirstAnniversary pic.twitter.com/OrFvl6T5Zr
— DINESH KUMAR (@dk4_dinesh) February 2, 2025
மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் விஜய் தலைமையில் இந்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் வெற்றிமாறனுக்கு மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.