வெற்றி துரைசாமி மறைவு - தினகரன் இரங்கல்

 
ttv

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி மறைவிற்கு தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

tn

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், இமாச்சல பிரதேசம் சட்லஜ் நதியில் மாயமான திரு.வெற்றி துரைசாமி அவர்களின் உடல் 8 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கபட்டிருப்பதாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. 

tntn

வெற்றி துரைசாமி அவர்களை இழந்து வாடும் அவரின் தந்தை திரு.சைதை துரைசாமி அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.