வெற்றி துரைசாமி அவர்களது அகால மறைவு, மிகவும் அதிர்ச்சிக்குரியது - அண்ணாமலை இரங்கல்

 
Annamalai

வெற்றி துரைசாமி அவர்களது அகால மறைவு, மிகவும் அதிர்ச்சிக்குரியது என்று அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். 

tn

இந்நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், முன்னாள் சென்னை மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான, அண்ணன் திரு @SDsamy52 அவர்களது மகன் திரு.வெற்றி துரைசாமி அவர்களது இறப்பு செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். பல்வேறு துறைகளில் மிகுந்த ஆர்வம் மிக்கவராக, சிறப்பாக செயல்பட்டு வந்த சகோதரர் திரு. வெற்றி துரைசாமி அவர்களது அகால மறைவு, மிகவும் அதிர்ச்சிக்குரியது.


அவரைப் பிரிந்து வாடும் அண்ணன் திரு @SDsamy52  அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் @BJP4Tamilnadu சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரர் திரு.வெற்றி துரைசாமி அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி! என்று பதிவிட்டுள்ளார்.