மூத்த அரசியல் தலைவர் பேபி ஜான் காலமானார்..!

 
1

கேரளாவின் மூத்த சிபிஎம் தலைவரும், கட்சியின் முன்னாள் மாநிலச் செயலக உறுப்பினருமான பேபி ஜான், தனது 75-வது வயதில் நேற்று காலமானார்.

திருச்சூரில் சிபிஎம் கட்சியின் முக்கிய முகமாகத் திகழ்ந்த இவர், சிறந்த பேச்சாளராகவும் அறியப்பட்டவர். 1969-ல் இடதுசாரி இயக்கங்கள் மூலம் அரசியல் பயணத்தைத் தொடங்கி, பல தசாப்தங்களாக பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தார்.

அவசரநிலைக் காலத்தில் சிறைவாசம் அனுபவித்த இவர், மிசா மற்றும் 'இந்தியப் பாதுகாப்பு விதிகள்' (DIR) ஆகியவற்றின் கீழ் இருமுறை கைது செய்யப்பட்டார்.