தமிழ்நாட்டில் மிக கனமழைப் பெய்ய வாய்ப்பு! ஆரஞ்ச் அலார்ட்

 
rain rain

தமிழ்நாட்டில் மிக கனமழைப் பெய்ய வாய்ப்புள்ளதால் இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

rain


தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வட மேற்கு திசையில் நகரக்கூடும் என்றும், இதன் காரணமாக தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இன்றும் நாளையும் ஆரஞ்சு அலாட் விடுக்கப்பட்டுள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்காலில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை நாளை கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.