#BREAKING 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

 
மழை

தெற்கு கடலோர ஆந்திர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

தெற்கு கடலோர ஆந்திர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.  திருநெல்வேலி,நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை,விழுப்புரம்,கடலூர், கள்ளக்குறிச்சி,சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், விருதுநகர்,தேனி, திண்டுக்கல், தென்காசி, மதரை ஆகி்ய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. திருச்சி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தருமபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, பெரம்லூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.