பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இன்று தீர்ப்பு!!

 
tn

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு   பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ்-க்கு   3 ஆண்டு சிறை தண்டனை விதித்து  விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில், ஜனவரி 6ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்திருந்தது. முன்னதாக, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணையை, வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

rajesh doss

இந்த மனு நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ராஜேஸ்தாஸ் தரப்பில், வாதங்களை முன் வைக்க அவகாசம் கேட்ட நிலையில் அமர்வு நீதிபதி, தீர்ப்பை தள்ளிவைத்துள்ளதாகவும், அதனால் வழக்கை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்தால் தனக்கு நியாயம் கிடைக்காது என்பதால், விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். இந்த மனு மீது முடிவெடுக்கும் வரை விழுப்புரம் அமர்வு நீதிமன்றம்  தீர்ப்பு வழங்க தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

tn

இதனிடையே பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வேறு மாவட்ட நீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டு வழக்கை மாற்றக்கோரி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் மார்ச்சுக்குள் விசாரணையை முடிவுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

 இந்நிலையில்  பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்குகிறது விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம்