தமிழகத்தைச் சேர்ந்த மா.வெங்கடேசன் பாஜக தேசிய செயலாளராக நியமனம்!
Aug 17, 2026, 18:46 IST1786972587946
நிதின் நபின் தலைமையிலான பாஜகவின் தேசியக் குழுவில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஸ்மிருதி இரானி மீண்டும் தேசியப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில், வசுந்தரா ராஜே சிந்தியா, ராம் மாதவ் மற்றும் பைஜயந்த் பாண்டா ஆகியோர் தேசியத் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பியூஷ் கோயல் தேசியப் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஒரு முக்கிய மாற்றமாக, பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT Cell) தலைவர்ப் பொறுப்பிலிருந்து அமித் மால்வியா நீக்கப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த மா.வெங்கடேசன் பாஜக தேசிய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2027-ல் நடைபெறவுள்ள மிக முக்கியமான தேர்தல்களுக்கு பாஜக தயாராகி வரும் நிலையில் இந்தக் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

