“ஏமாற்றிய அந்த நடிகர்” கங்கை அமரனின் சர்ச்சை பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த வெங்கட் பிரபு!
சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு படம் குறித்த வதந்திகளுக்கு வெங்கட்பிரபு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
வெங்கட் பிரபு வேற ஒரு படத்தை நம்பி இருந்தான், அதனால தான் அவன் அடுத்த படம் லேட் ஆகுது. அந்த நடிகர் யார்னு நான் பேர சொல்ல மாட்டேன், அவரை குறை சொல்ல வேணாம் அவர் வாழட்டும். வெங்கட் பிரபு கதையெல்லாம் ரெடி பண்ணிட்டான், அந்த நடிகரும் கால் ஷீட் கொடுத்துட்டார். ஆனா, அந்த நடிகரோட ஒரு படம் ஹிட் ஆன உடனே அந்த இயக்குனரோட இரண்டு படம் எடுத்துட்டு தான் அடுத்த படத்தை பண்ணுவேனனு சொல்லிட்டார். அத வெங்கட் பிரபுவுக்கு அனுப்பி இது உனக்கு தேவையா, எவ்ளோ பெரிய நடிகரா இருந்தாலும் இதுக்கு மேல அவன் கால்ல விழுந்து நடிக்க வைக்கணுமா? அது நம்ம குடும்பத்துக்கு அவமானம் இல்லையா? அவன் உன்ன உதாசினபடுத்துறான், நீயும் அவனை உதாசினப்படுத்தி அவன் படத்தை நீ பண்ணக் கூடாதுனு சொன்னேன் என அண்மையில் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கங்கை அமரன் பேசியிருந்தார். அவர் நடிகர் சிவகார்த்திகேயனைதான் குறிப்பிட்டு பேசியதாக சமூக வலைதளங்களில் சர்ச்சை கிளம்பியது.
SK is always a dear friend/brother to me ❤️
— venkat prabhu (@vp_offl) September 28, 2026
A lot of speculations and controversies are going around. As a father, when a film involving your own son gets delayed, the frustration is natural. He probably doesn’t know the complete picture, and I can’t blame him for that.
I’m a…
இதுதொடர்பாக இயக்குநர் வெங்கட்பிரபு தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அந்த பதிவில், “சிவகார்த்திகேயன் எனக்கு எப்போதுமே நல்ல நண்பரும், சகோதரனும்தான். பல யூகங்களும் சர்ச்சைகளும் பரவி வருகின்றன. ஒரு தந்தையாக, உங்கள் சொந்த மகன் சம்பந்தப்பட்ட ஒரு படம் தாமதமாகும் போது, ஏமாற்றம் ஏற்படுவது இயல்புதான். அவருக்கு முழு விவரமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அதற்காக நான் அவரைக் குறை சொல்ல முடியாது. என் வேலை என்று வரும்போது நான் மிகவும் அமைதியானவன், என் தொழில்ரீதியான விஷயங்களை அவரிடம் உட்பட யாரிடமும் விரிவாகப் பேசுவதில்லை. பல்வேறு காரணங்களால் அந்தத் திட்டம் தொடங்க முடியவில்லை. அவ்வளவுதான். எந்த வருத்தமும் இல்லை. சரியான நேரம் வந்து,ஒரு நல்ல கதை கிடைத்தால்,நான் மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் பணியாற்ற விரும்புவேன். ஆகவே, தயவுசெய்து இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைப்போம். நான் என் அடுத்த வேலையில் மும்முரமாக இருக்கிறேன். என் சகோதரன் சியோனுக்கு என் நல்வாழ்த்துக்கள்.

