வேங்கைவயல் சம்பவம் - டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுத்தவர்களுக்கு மீண்டும் சம்மன்

 
tn

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் அனுமதிக்காமலும் அவர்கள் பயன்படுத்தும் நீர்த்தேக்க தொட்டியில் மனித மல்த்தை கலந்து சில விஷமிகள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.  மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்தது கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி தெரியவந்த நிலையில்,  இது குறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ttn

இதை தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த விவகாரத்தில்  ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து  வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் ஒரு நபர் ஆணையம் விசாரணை கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது.  

tnஇதனிடையே புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி,எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த மனுவில் 11 பேரை இந்த வழக்கில் சந்தேகப்படுவதாகவும்,  அவர்களுடைய டிஎன்ஏவை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த நிலையில் , இதற்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.  இதையடுத்து ஆயுதப்படை  காவலர் முரளி ராஜா உட்பட 9 பேர் இறையூர் மற்றும் கீழம் முத்துக்காடு பகுதியை சேர்ந்த 2 என மொத்தம் 11 பேரில் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை எடுப்பதற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த டிஎன்ஏ பரிசோதனைக்கு வரமாட்டோம் என்று சிபிசிஐடி போலீசாரிடம் இவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் டிஎன்ஏ பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேருக்கும் பரிசோதனைக்கு ஆஜராக  வேண்டும் என்ற நீதிமன்ற அனுமதியுடன் சிபிசிஐடி காவல் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.