வேங்கைவயல் வழக்கு - நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம்!

வேங்கைவயல் வழக்கு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திலிருந்து, நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வேங்கைவயல் வழக்கு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திலிருந்து, நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி தாக்கல் செய்த மனுவை ஏற்கக்கூடாது என விசிக தரப்பு தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வன்கொடுமை சட்டப்பிரிவு இல்லாததால், வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து மாற்றப்பட்டுள்ளது. வேங்கை வயல் விவகாரத்தில் அறிவியல் பூர்வமான ஆய்வு முடிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம் என அரசுத்தரப்பு வழக்கறிஞர் குமார் வாதிட்டார். அனைத்தையும் பரிசீலித்த நீதிமன்றம் சி.பி.சி.ஐ.டி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்று, வழக்கை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.