"வெள்ளையர்களை வென்று முடி சூடிய ராணி வீரமங்கை வேலுநாச்சியார்" - ஓபிஎஸ், டிடிவி தினகரன் ட்வீட்

 
tn


இந்திய சுதந்திர வரலாற்றில் இடம்பெற்றுள்ள ஒருசில பெண்களில் மிக முக்கியமானவர்  வீரமங்கை ராணி வேலுநச்சியார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலுநாச்சியார், 17 ஆம் நூற்றாண்டிலேயே துணிச்சலாக ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியவர். அத்தகைய புகழ்மிக்க வீரமங்கை வேலு நாச்சியாரின் 283 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

வேலுநாச்சியார்

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் , சிவகங்கை சீமையிலிருந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த முதல் பெண் விடுதலை வீராங்கனையும் இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் வெள்ளையர்களை வென்று முடி சூடிய ராணியுமாகிய வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் பிறந்தநாளில் அவரது வீரத்தையும் நாட்டுப்பற்றையும் போற்றி வணங்குகிறேன். என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.




அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், பெரும் வலிமையோடு இருந்த ஆங்கிலேயரை நெஞ்சுரம் கொண்டு எதிர்த்த இந்தியாவின் முதல் பெண் அரசி, தனது ஆற்றல் நிறைந்த போர் உத்திகளால் ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த சிவகங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில், அந்த வீரமங்கையின் தியாகத்தையும், தீரத்தையும் போற்றி வணங்கிடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.