"வேலுநாச்சியாரின் வீரமும், துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும்" - பிரதமர் மோடி ட்வீட்!!

 
modi

வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார்.

velu

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட முதல் பெண் வீரமங்கை வேலுநாச்சியாரின் 282வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த இவர் ,சிறுவயது முதலே ஆயுத பயிற்சி பெற்றவர்.  இவர் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாத தேவரை மணந்தார்.  இதையடுத்து ஆங்கிலேயே படையெடுப்பில் கணவரை இழந்த வேலுநாச்சியார்,  ஆங்கிலேயருக்கு எதிராக குறுநில மன்னர்களை ஒன்று திரட்டினார்,  ஹைதர் அலி உதவியுடன் ஆங்கிலேயரை விரட்டி சிவகங்கையை மீட்டார்.  1796 ஆம் ஆண்டு தனது 66வது வயதில் வேலுநாச்சியார் மரணத்தை தழுவினார்.  வேலு நாச்சியாரின் வீரத்தை பறைசாற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் சூரக்குளத்தில்  அரசு சார்பில் அவருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன்.  அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன்" என்று தமிழில் பதிவிட்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சிவகங்கை சிம்மம்,வீரத்திருமகள் வேலுநாச்சியார். அடக்குமுறையை எதிர்த்து ஆங்கிலேயரை வென்று காட்டிய வீர தமிழச்சி மகளிர் சக்தியை மகா சக்தியாக உயர்த்திய மங்கையர் திலகத்தை பிறந்த நாளில் நினைவு கூறுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.