"கனமழையால் பாதிப்பு; பள்ளி கட்டிடங்களை சீரமைங்க" - அரசுக்கு வேல்முருகன் கோரிக்கை!

 
வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ளஅறிக்கையில், "தமிழ்நாட்டில் மொத்தம் 37 ஆயிரத்து 579 அரசுப் பள்ளிகள் உள்ளன. அதேபோல மொத்தம் 12 ஆயிரத்து 382 தனியார் பள்ளிகள் உள்ளன. அரசு உதவி பெறும் பள்ளிகளைப் பொறுத்தவரை மொத்தம் 8 ஆயிரத்து 328 பள்ளிகள் உள்ளன. தமிழ்நாடு அரசின் 91 கலைக்கல்லூரிகளும், 7 கல்வியியல் கல்லூரிகளும், 40 பல்கலைக்கழகக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இவை தவிர்த்து, அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் என ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

10.5% இடஒதுக்கீடு; அதிமுக-பாமக கூட்டணி! -இவற்றை மீறி வேல்முருகன் வென்றது  எப்படி? #TNelections2021| Velmurugan a short analysis on tamilnadu  elections 2021

இக்கல்லூரிகளில் உள்ள சில கல்லூரிகள் பழமையானது என்பதோடு, அக்கல்லூரிகளின் கட்டிடங்களில் பெரும்பாலானவை மோசமான நிலையில் உள்ளன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஆங்காங்கே கட்டிடங்கள் இடிந்து விழுவதும், சேதமடைவதும் நடந்து வருகிறது. எனவே, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளின் கட்டிடங்களின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். 

நாளை மதியம் ஆரம்பிக்கும் மழை.. சென்னைவாசிகள் இப்பகுதிகளுக்கு செல்வதை  தவிர்க்கவும்! | Chennai people can avoid these places which stagnant of  water - Tamil Oneindia

பழுதான பள்ளி, கல்லூரிக் கட்டிடங்களைப் பட்டியலிட்டு அவற்றைச் சீரமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது. பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளான கழிப்பறை, குடிநீர், காற்றோட்டமான அறைகளை ஏற்படுத்துவது மற்றும் தேவையான ஆசிரியர்களை நியமிப்பது போன்ற அத்தியாவசியத் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

School Opens In September? | பள்ளி , கல்லூரிகள் செப்டம்பர் 1 - ம் தேதி  திறப்பு ? புதிய விதிமுறைகளை பின்பற்ற மத்திய அரசு முடிவு !! - Quick Line News

கடந்த அதிமுக ஆட்சியில், கட்டப்பட்ட பள்ளிகளின் கூடுதல் வகுப்பறைகள் தரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இப்புகார் குறித்து ஆய்வு செய்வதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.