பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் அரைவேக்காட்டுத்தனமாக செயல்படுகின்றனர்- வேல்முருகன்

 
என்.எல்.சிக்கு நிலம் கையகப்படுத்த வந்தால்.. மாபெரும் போராட்டம் வெடிக்கும்  - வேல்முருகன் எச்சரிக்கை.. 

சட்டப்பேரவையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அரைவேக்காட்டுத்தனமாக செயல்படுகின்றனர் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார்.

திமுக எங்கு போட்டியிட சொன்னாலும் தயாராக உள்ளோம்... தமிழக வாழ்வுரிமை கட்சி  வேல்முருகன் பேட்டி! | Velmurugan said that he has asked for a seat in the  lok sabha elections ...

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என  எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி அதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் போது பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில், பல்கலை வேந்தராக உள்ள ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறினார். சட்ட சபையில் ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த போது தனது பேரையும் கூற வேண்டும் என வேல்முருகன் குறுகிட்டார். அப்போது அவையில் இருந்த சக திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் வேல்முருகனை உட்காருங்கள் எனக் கூறினர்.

தொடர்ந்து பேரவையில் வளாகத்தில் பேசிய திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் வேல்முருகன்,, “சட்டப்பேரவையில் ஒரு எம்எல்ஏ வாக நான் ஒரு சில கோரிக்கைகளை முன்வைக்க இருந்த போது..... திமுக. எம்.எல்.ஏ.க்கள் அரைவேக்காட்டுத்தனமாக செயல்படுகின்றனர்.. என்ன பேச போகிறேன் என்பதே தெரியாமல் திமுக எம்.எல்.ஏக்கள் கூச்சலிடுகின்றனர். திமுகவினரின் செயலை சபாநாயகர் தடுத்து நிறுத்த வேண்டும். கூட்டணி கட்சிக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா? என்னை எதிர்ப்பது என்பது அரைவேக்காட்டுத்தனமான செயல்” என்றார்.