ஓட்டு கேட்கும் போது தேவைப்படும் கூட்டணி கட்சித் தலைவர்கள் தேர்தல் முடிந்தவுடன் ஒதுக்கப்படுகிறார்கள்- வேல்முருகன் குற்றச்சாட்டு
“ஓட்டு கேட்கும் போது தேவைப்படும் கூட்டணி கட்சித் தலைவர்கள் தேர்தல் முடிந்தவுடன் PROTOCOL என ஒதுக்கப்படுகின்றனர்”... இதற்கெல்லாம் தேர்தல் நேரத்தில் மக்கள் எதிர்வினையாற்றுவார்கள் என தவாக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.
கடலூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் தெரிவிக்கையில், எப்போதெல்லாம் தமிழகத்தில் பேரிடர் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் பாதிக்கப்படும் இடம் கடலூர். சாத்தனூர் அணை திறப்பினால் எனது தொகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் குடும்ப அட்டைக்கு வெறும் 2 ஆயிரம் தமிழக முதல்வர் அறிவித்தார். அதுவும் மாவட்டம் முழுவதும் வழங்கப்படவில்லை. கடந்த 2001 ம் ஆண்டு முதல் பேரிடரால் பாதிக்கப்படும் ஒவ்வொரு முறையும் மக்களிடமும் ஆறுதல் தான் தெரிவிக்க முடிகிறது.நான் கோரிக்கை தான் வைக்க முடியும். ஆனால் அரசு தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.துணை முதல்வர் வரும் போது பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட வேண்டுகோள்வைத்தேன். ஆனால் அவர் வந்து பார்வையிடவில்லை.தனிப்பட்ட எம்எல்ஏவாக எவ்வளவு லட்ச மக்களுக்கு சொந்த செலவில் உதவ முடியும் ஏன் வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2ஆயிரம் நிவாரணம் வழங்கி பிச்சையா போடுகின்றனர் என பேசினார்.அரசின் நிர்வாகத்திறன்மின்மையால் மக்கள் உயிர் பலியாகினர். மது குடித்து உயிரிழந்தால் 10 லட்சம் அரசு வழங்குகின்றது என்றார்.ஆட்சி முடிந்தால் மக்களை சந்திக்க வந்து தான் ஆக வேண்டும். தேர்தலின்போது முதல்வருடன் அமர வைப்பவர்கள் தேர்தல் முடிந்தவுடன் PROTOCOL வந்துவிடுகின்றது என்றும் இதற்கெல்லாம் தேர்தல் நேரத்தில் மக்கள் எதிர்வினையாற்றுவார்கள் - வேல்முருகன் ஆவேசமாக தெரிவித்தார். அதிகாரிகள் செய்யும் தவறுகள் முதல்வருக்கு தெரிகின்றதா?இல்லையா? ஐஏஎஸ் ஐபிஎஸ் என தவறு யார் செய்தாலும் தவறு தான் ஊழலுக்கு துணை போகும் அதிகாரிகளை தமிழக முதல்வர் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.இல்லையெனில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மக்களை திரட்டி பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்றார். தமிழகத்தை பேரிடம் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் வேல்முருகன் வலியுறுத்தினார்.