மீண்டும் அதிமுகவில் இணைந்த வெல்லமண்டி நடராஜன்

 
ச்

முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அதிமுகவில் இணைந்தார்.

Image


முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது தமிழக அரசியலில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், கள நிலவரம் வேறாக உள்ளது. அவரது வலதுகரமாக இருந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், ஓபிஎஸ்ஸின் இந்த முடிவை ஏற்காமல் ஈபிஎஸ் தலைமையிலான அதிமுகவிலேயே தங்களை இணைத்துக்கொண்டுவருகின்றனர். ஓபிஎஸ்ஸுடன் பெரிய அளவில் தொண்டர்கள் செல்லாதது, இந்த இணைப்பால் அதிமுகவின் வாக்கு வங்கிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதையே காட்டுகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று (27.02.2026), சென்னை பசுமைவழிச்சாலை உள்ள செவ்வந்தி இல்லத்தில், ஓபிஎஸ் அணியில் செயல்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்  நேரில் சந்தித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.