மருதமலையில் வேல் திருட்டு- வசமாக சிக்கிய சாமியார்

 
ர்
கோவையில் உள்ள மடத்தில் வெள்ளி வேலை திருடிய சாமியார் வெங்கடேஷ் சர்மா போலிசாரால் கைது செய்யப்பட்டார்.
கோவை மருதமலை அடிவாரத்தில் உள்ள மடத்தில் சாமியார் ஒருபர் வெள்ளி வேலை திருடினார். வடவள்ளி போலிசாரிடம் இதுகுறித்து புகார் தரப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலிசார் வழக்கு பதிவு செய்தனர். தனியாருக்கு சொந்தமான மடத்தில் வெள்ளி களவாடிய சாமியார் சி.சி.டி.வி. காட்சிகளை கைபற்றி விசாரித்தனர். வெள்ளி வேல் திருடிய நபர் குறித்து  விசாரித்தனர். இரண்டரை கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு லட்சம் மதிப்பிலான வெள்ளி வேல் கைப்பற்ற வெள்ளி விற்பனை பகுதிகளிலும் தீவிரமாக தேடியதாக சொல்லப்படுகின்றன.
வழக்கு பதிவு செய்த வடவள்ளி போலீசார், சிசிடிவி காட்சிகளை கொண்டு நடத்தி விசாரணையில், பல்வேறு ஊர்களில் மடத்திற்கு சென்று தங்கும் பழக்கம் உடைய வெங்கடேஷ் சர்மா என்ற நபர் வெள்ளி வேலை திருடியது தெரிய வந்தன. தலைமறைவாக இருந்த சாமியார் வெங்கடேஷ் சர்மா போலீசார் கைது செய்தனர். வெள்ளி நீட்ட போலிசார், சாமியார் வெங்கடேஷ் சர்மா வேறு இடங்களில் கைவரிசை காட்டியிருக்கிறானா என விசாரணை நடத்திவருகின்றனர்.