ஊரடங்கில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் 6 நாட்களுக்கு பின் திருப்பி அளிக்கப்படும்- காவல்துறை

 
police

ஊரடங்கு விதிகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் ஆறு நாட்களுக்குப் பிறகே உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என சென்னை காவல் கூடுதல் ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார். 

Tamil Nadu lockdown to be extended by a week with more easing | Chennai  News - Times of India

கொரோனா பரவல் காரணமாக கடந்த 6-ஆம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அனுமதிக்கப்பட்ட பணிகளை தவிர்த்து வெளியில் வருபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துவருகின்றனர். அதன்படி, நேற்று முதல் முழு ஊரடங்கில் விதிமுறைகளை மீறியதாக,  318 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 760 ஒரு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 665 இருசக்கர வாகனங்களும் 65 ஆட்டோக்கள் 30 இலகு ரக வாகனங்களும் அடங்கும். 

இந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் நடந்த வாகன தணிக்கையை சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் கண்ணன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கூடுதல் ஆணையர் கண்ணன், ”ஆம்புலன்ஸ் வாகனங்கள், மருத்துவர்கள் போன்ற அவசர தேவைக்கு செல்லும் வாகனங்களை வாகன தணிக்கையில் ஈடுபடுத்தி தாமதிக்காமல் அவர்கள் விரைந்து செல்ல ஏதுவாக சாலைகளில் தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்கு செல்லும் பொது மக்களும் அனுமதிக்கப்படுவார்கள். அவசரத் தேவையாக பொதுமக்கள் வெளியில் வந்து வாகனத் தணிக்கையில் தடுத்து  நிறுத்தப்பட்டாலும் அல்லது வேறு எதுவும் அவசர தேவை என்றாலும் காவல்துறையினரை தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம். அதற்கென 9498181239 மற்றும் 9498181236 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட்டுவருகிறது. ஊரடங்கில் விதிகளை மீறி வெளியில் வரும் நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதற்கான அபராதம் செலுத்திய பின்னர் ஆறு நாட்களுக்குப் பிறகு உரியவரிடம் ஒப்படைக்கப்படும்” எனக் கூறினார்.