மாடு குறுக்கே பாய்ந்ததால் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்து!!

 
tn

சென்னையில் சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்களை மாடு முட்டி காயமடையும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மேலும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் வகையில் மாடுகள் சுற்றி திரிகின்றனர்.  குறிப்பாக அமைந்தகரை, ஐஸ் ஹவுஸ் உள்ளிட்ட பல இடங்களில் பொதுமக்களை மாடு முட்டி தூக்கி வீசும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாட்டின் உரிமையாளர்கள் மீது போலீசார்  வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னையில் மாடுகள்

சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை போக்குவரத்து போலீசார் சிசிடிவி மூலமாகவோ, நேரடியாகவோ புகைப்படம் எடுத்து அதை சென்னை மாநகராட்சிக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக முக்கிய சாலைகளான கோயம்பேடு, திருவல்லிக்கேணி, நங்க நல்லூர் உட்பட பல்வேறு சாலைகளில் போக்குவரத்து பணியில் ஈடுபடும் காவலர்கள் சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளை கணக்கெடுக்கின்றனர். பின்னர் கணக்கெடுத்து சம்மந்தப்பட்ட மாட்டின் உரிமையாளர்களை வரவழைத்து மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்து அனுப்புகின்றனர்.

tn

இந்நிலையில் சென்னை கோயம்பேடு பேருந்து முனையம் அருகே உள்ள மேம்பாலத்தில் நேற்றிரவு மாடு குறுக்கே பாய்ந்ததால் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி சிறிய விபத்து ஏற்பட்டது .3 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டன. சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் சென்னையில் விபத்துகள் நடப்பது தொடர் கதையாகிவிட்டதாக வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்தனர்.