வீரப்பன் மகளுக்கு நா.த.க-யில் புதிய பொறுப்பு

 
s s

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த வீரப்பன் மகள் வித்யா ராணி நாதக இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியை விட்டு பலர் விலகிய நிலையில் புதிய மாநில பொறுப்பாளர்களை நாம் தமிழர் கட்சி நியமித்து வருகிறது. வீரப்பன் மகளுக்கு நாம் தமிழர் கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வீரப்பன் மகள் வித்தியா ராணி நா.த.கவில் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடதக்கது.