#BREAKING 2 தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்துப்போட்டி
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்துப்போட்டியிடும் என வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.
இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி நிலைப்பாடு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன், “எந்த கூட்டணியிலும் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இல்லை. மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் திணிக்கப்பட்ட ஒன்றாக இருக்குறது. மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்துப்போட்டியிடும். தாராபுரம் இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும்.
ஆளுநர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக, தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தோம். அரசின் குரலாக நாங்கள் இருக்க மாட்டோம். மக்களின் குரலாகவே இருப்போம். தவெக அரசு,பல விவகாரங்களை அலட்சியமாக கடந்து செல்கிறார்கள். அரசை கவிழ்க்கும் எண்ணம் இல்லை. வாபஸ் பெறும் எண்ணமும் இல்லை.பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதை ஏற்க முடியாது... மீனவ மக்கள் வழிவழியாக வாழ்ந்து வரும் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் கூடாது” என்றார்.

