வீரபாண்டிய கட்டபொம்மனின் 264-வது பிறந்ததினம் - எம்.பி.கனிமொழி, அண்ணாமலை ட்வீட்

 
tn

ஆங்கிலேயரை எதிர்த்து தன் இறுதி மூச்சுவரை அசாதாரண துணிச்சலுடன் போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனின் 264-வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா விளங்குகிறது என்றால் அதற்கு காரணம் தன்னலமற்ற தியாகிகள் பலர் தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஈந்து அரும்பாடுபட்டதுதான்.   அவ்வாறு அரும்பாடுபட்டவர்களில் முதன்மையானவராகவும், முன்னோடியாகவும் விளங்கியவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.  ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தூக்கு மேடை ஏறிய வீரபாண்டிய கட்டபொம்மனின்  264-வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது.

வீரபாண்டிய கட்டபொம்மன்

இந்நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 263வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருஉருவபடத்திற்கு ஈபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல் திமுக எம்.பி. கனிமொழி , இந்திய விடுதலை போராட்டத்தின் ஆற்றல்மிகு அடையாளம்; அடிமைத்தனத்திற்கும் ஆதிக்கத்திற்கு அஞ்சாத கொள்கையாளர் மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் பிறந்தநாளான இன்று, அவரது வீரத்தையும் தியாகங்களையும் நினைவில் ஏந்திப் போற்றுவோம். என்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.



தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது இறுதி மூச்சு வரை ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிராக தன்னெழுச்சியுடன் போராடிய பாஞ்சாலங்குறிச்சி கண்ட மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த தினமான இன்று அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம். என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வீர முழக்கமிட்டு, இந்திய சுதந்திர  போராட்ட வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்றிருக்கும் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளில், அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் கடைசிவரை நெஞ்சுநிமிர்த்தி களத்தில் நின்ற அந்த மாவீரரின் வீரத்தைப் போற்றி வணங்குவோம்! என்று பதிவிட்டுள்ளார்.