"வீரன்" டாஸ்மாக்கில் அறிமுகமான புதிய மதுபானம்..!

 
1

2022ஆம் ஆண்டு டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த விற்பனையில் மலிவு விலை மதுபானங்கள் சுமார் 50 சதவீத இடத்தை பிடித்துள்ளன. தினக் கூலி ஊழியர்கள் ஏராளமானோர் டாஸ்மாக் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இவர்கள் மீடியம் ரேஞ்ச் மதுபானங்களை விரும்பி அருந்தி வந்த நிலையில், விலை உயர்வால் சாதாரண ரேஞ்சிற்கு மாறிவிட்டனர். இந்த சூழலில் புதிதாக 12 வகை மதுபானங்களை விற்பனைக்கு கொண்டு டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இவை குறைந்த விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் மதுபிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் டாஸ்மாக் கிளைகளில் விற்பனைக்கு கிடைக்கவுள்ளன. இதில் பூந்தமல்லியில் உள்ள என்ரிகா எண்டர்பிரைசஸ் நிறுவனம் சாதாரண வகை மதுபானமாக ”வீரன்” என்ற புதிய பிராந்தியை அறிமுகம் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு டாஸ்மாக் நிர்வாகம் வீரன் என்ற பெயரில் புதிய மதுபானம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஆங்கில மொழியில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டு வந்த சரக்கு பாட்டில்களுக்கு மத்தியில், வீரன் என தமிழில் இந்த மதுபான பாட்டில் வெளியாகியுள்ளது. இந்த வீரனுக்கு விலை ரூ.140ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்த விலை மதுபானத்திற்கு குடிமகன்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும், பல்வேறு தரப்பினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழில் பெயர் வைத்ததை வரவேற்பதா? வீரன் என்ற பெயரில் புதிய மதுவகையை அறிமுகம் செய்ததற்கு எதிர்ப்பதா? என்பது தெரியாமல் பலரும் விழிபிதுங்கி இருக்கின்றனர்.