வீரமணி வழக்கு - காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன்குமாரிடம் 5 மணிநேரம் விசாரணை

 
n

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி போக்சோ வழக்கு குறித்து காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன்குமாரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்திவருகின்றனர்.


10-க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி உட்பட 3 பேரை போலீசார் ஏற்கெனவே கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஜெம் வீரமணி மீது வழக்கு பதிவு செய்து சம்மன் அனுப்பியுள்ள நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான பிரகாஷ் என்பவருக்கும் பாலியல் தொழில் தடுப்பு பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. சம்மன் வழங்க பிரகாஷை போலீஸ் தேடி சென்ற நிலையில், அவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். விசாரணையில் தனது பெயர் சிறுமிகள் பாலியல் வழக்கில் (எஃப்ஐஆர்) சிக்காமல் இருக்க வீரமணி, காவல் துறை உயரதிகாரிகளுக்கும் முக்கிய அரசியல் கட்சியினருக்கும் ரூ. 70 கோடி மதிப்பிலான பணத்தை செட்டில் செய்ததாக சொல்லப்படுகிறது

இந்நிலையில் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி போக்சோ வழக்கு குறித்து காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன்குமாரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்திவருகின்றனர். காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன்குமாரிடம் சுமார் 5மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது. ஜெம் வீரமணி வழக்கில் வீடியோ ஆதாரங்களை போலீசில் முதலில் வழங்கியதா் ரஞ்சன்குமார் கூறியிருந்த நிலையில், தீவிர விசாரணை நடைபெற்றது. சமூக வலைதளம் உள்ளிட்டவற்றிற்கு வீடியோக்களை பரப்பிய காரணம் தொடர்பாகவும் ரஞ்சனிடம் விசாரணை நடைபெற்றது. ஜெம் வீரமணி தொடர்பாக 2024ல் வீடியோ ஆதாரத்துடன் அளித்த புகார் குறித்து அப்போது விசாரிக்கப்பட்டதா? என்பது பற்றியும் ரஞ்சனிடம் விசாரணை நடைபெற்றது.