#BREAKING வீரமணியின் வங்கி கணக்குகள் முடக்கம்
போக்சோ வழக்குகளில் கைதாகியுள்ள ஜெம் வீரமணி மற்றும் அவரது நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை சிறப்புப் புலனாய்வுக் குழு முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை பெருநகர காவல்துறையின் விபச்சார தடுப்பு பிரிவில் சிறுமிகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பிரபல கிரானைட் தொழிலதிபர் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி, மகேந்திரசிம்ஹன் ஆகியோர் கடந்த 29.08.2026 அன்று கைது செய்யப்பட்டனர். மேலும் இது தொடர்பான மற்றொரு வீடியோவை வைத்திருந்தும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காத கணேசன் என்பவர் 22.09.2026 அன்று கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். வீரமணியின் பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு சிறுமிகளை அழைத்து வந்து உடந்தையாக இருந்த ஓட்டுநர்கள் லாசர், பார்த்திபன் மற்றும் பாபு ஆகியோர்கள் 05.10.2026 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வீரமணிக்கு உதவிய CNS நிறுவனத்தின் Manager சக்திவேல் என்பவர் 18.10.2026ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை இவ்வழக்குகளில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறையில் உள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணி மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், புதிதாக பதிவு செய்யப்பட்ட இரு வழக்குகளிலும் நவம்பர் 10ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே போக்சோ வழக்குகளில் கைதாகியுள்ள ஜெம் வீரமணி மற்றும் அவரது நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை சிறப்புப் புலனாய்வுக் குழு முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

