நா.த.க வில் தினந்தோறும் ஒருவர் பாலியல் வழக்கில் கைதாகிறார்கள்- வீரலெட்சுமி

 
நா.த.க வில் தினந்தோறும் ஒருவர் பாலியல் வழக்கில் கைதாகிறார்கள்- வீரலெட்சுமி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த நிலையில் திமுக சட்டத்துறை மாநில துணை செயலாளர் மருது கணேஷ், திமுக நிர்வாகி ரகு, தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி, திராவிட விடுதலை கழகத்தின் மாவட்ட செயலாளர் உமாபதி ஆகியோர் தனித்தனியாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வந்து புகார் அளித்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி, “சீமான் அடிப்படை ஆதாரம் இல்லாமல் பெரியாரை பற்றி பேசுகிறார். சீமான் ஏற்கனவே தமிழ் தாய் வாழ்த்தை இழிவு செய்தார், அதே போல திண்டுக்கல் டி.ஐ.ஜியை இழிவாக பேசி இருக்கிறார், தற்போது பெரியாரை அவமதித்து இருக்கிறார். இந்த முறையாவது சீமான் மீது கண்டிப்பாக காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நா.த.க, த.வெ.க-வில் தினந்தோறும் ஒருவர் பாலியல் வழக்கில் கைதாகிறார்கள்... அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் அரசியல் செய்கின்றன. விஜய் ஆளுநரை சந்திக்க எதற்கு திருட்டு தனமாக மறைமுகமாக செல்லவேண்டும்?” எனக் கேள்வி எழுப்பினார்.