சீமானை 15 நாட்களில் மன்னிப்பு கேட்க வைப்பேன்- வீரலட்சுமி சவால்

 
சீமான்

பொதுவெளியில் தன்னை  மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறிய சீமானை 15 நாட்களில் தன்னிடம் மன்னிப்பு கேட்க வைப்பேன் என தமிழர் முன்னேற்ற படை தலைவர் கி. வீரலட்சுமி சவால் விடுத்துள்ளார்.

நடிகை விஜயலட்சுமி  சீமான் மீது கொடுத்த திருமணம் மோசடி புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது மனைவி  கயல்விழியுடன்
வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு  வந்து ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தன்னை களங்கப்படுத்திய தமிழர் முன்னேற்றப்படை தலைவர் கி.வீரலட்சுமி தன்னிடம் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி இருந்தார்.

இதற்கு எதிர்வினையாக தமிழர் முன்னேற்றப்படை  தலைவர் கி. வீரலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோவில், "யார்கிட்ட வந்து யாரிடம் மன்னிப்பு கேட்பது. மானமே இல்லாத சீமான் என் மீது மான நஷ்டஈடு வழக்கு போடும்போது, மானம் போனால் உசுரு போவதற்கு சமம் என வம்சத்தில் பிறந்த தனக்கு எவ்வளவு இருக்கும். 

தன்னை பற்றி தரைக்குறைவாக பேசிய சீமான் மீது விரைவில் மான நஷ்ட ஈடு வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்வேன். சீமான் தன்னிடம் 15 நாட்களில் மன்னிப்பு கேட்க வைப்பேன்" என சவால் விட்டு வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.