கஸ்தூரிக்கு வீரலட்சுமி மீண்டும் வீடியோ மூலம் பதிலடி!

 
1

இட ஒதுக்கீடு பெறுபவர்கள் கொலை கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள் என நடிகை கஸ்தூரி ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார்.கஸ்தூரியின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.

இந்நிலையில் நடிகை கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழர் முன்னேற்ற படை கட்சியின் தலைவரான வீரலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் இட ஒதுக்கீட்டில் உள்ள குறிப்பிட்ட சாதியினர் பார்க்கும் படத்தால் தான் நீங்கள் உடை நல்ல உடை உடுத்துகிறீர்கள், மேக்கப் செய்து கொள்கிறீர்கள் என்று கடுமையாக பதில் அளித்து இருந்தார்.

மேலும் கஸ்தூரிக்கு வாய்க்கொழுப்பு அதிகம் என்றும் திருநங்கைகளையும் இதுபோன்று அவர் தரக்குறைவாக பேசியிருந்தார் என்றும் விமர்சித்தார் வீரலட்சுமி. மேலும் மூன்று நாட்களுக்குள் கஸ்தூரி தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் தனது தமிழர் முன்னேற்ற படையினரை திரட்டி கஸ்தூரியின் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் வீரலட்சுமி தெரிவித்திருந்தார்.

வீரலட்சுமியின் அந்த வீடியோவுக்கு நடிகை கஸ்தூரி பதிலளித்திருந்தார். இது தொடர்பாக அவர் பதிவிட்டு இருந்த ட்வீட்டில், வீரத்தை பேருல மட்டும் வச்சிக்கிட்டு ஏற்கனவே சில ஓசி சோறு பேர்வழிகள் திரியுறாங்க... அடுத்து இன்னுமொரு அரமெண்டல்...3 நாள் கெடு...படையோட வந்து போராட்டம் பண்ணுவேன்னு எல்லாம் சொல்லிச்சா ? நான் கூட என்னவோன்னு நினைச்சேன்... சொந்த சொரி சிரங்கு படையச் சொல்லி யிருக்கு போல அந்த அம்மா... என நக்கலாக பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இதற்கும் ஒரு வீடியோவை போட்டு பதிலடி கொடுத்துள்ளார் வீரலட்சுமி. அதில்,"தேவதாசி முறை இருப்பதாகவே நினைத்துக் கொண்டு தன்னையும் தேவதாசியாகவே நினைத்துக் கொண்டு சிலர் கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.. அவர்கள் வேறு யாரும் அல்ல நடிகை கஸ்தூரி தான் என கூறியுள்ளார். நீங்கள் சொல்லும் கருத்துக்கள் எல்லாம் புரட்சிகரமான கருத்துக்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?

நீங்கள் சொல்லும் கருத்துக்களை மக்கள் மிகவும் அருவருப்புடன் பார்க்கிறார்கள்..மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என நான் கூறியிருந்தேன்.. போராட்டம் அறிவித்துள்ளேன்.. வருவேன் வெயிட் அண்ட் சீ" என கூறியுள்ளார் வீரலட்சுமி.