“முன்னாள் முதல்வர் ஸ்டாலின் என்னை தொடர்புகொண்டு பேசினார்”- வன்னி அரசு
தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அண்ணன் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், இன்று மதியம் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு உள்ளன்போடு வாழ்த்தியதாக அமைச்சர் வன்னி அரசு கூறியுள்ளார்.
’வாழ்த்துகள் வன்னி அரசு.. இந்த புதிய பொறுப்பில் சிறப்பா பணியாற்றுவீங்கனு உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு’
— வன்னி அரசு (@VanniTamizhVCK) May 22, 2026
தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அண்ணன் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், இன்று… https://t.co/H5cFCmW0D0
இதுதொடர்பாக சமூகநலத்துறை அமைச்சர் வன்னி அரசு தனது எக்ஸ் தளத்தில், “’வாழ்த்துகள் வன்னி அரசு.. இந்த புதிய பொறுப்பில் சிறப்பா பணியாற்றுவீங்கனு உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.... தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அண்ணன் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், இன்று மதியம் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு உள்ளன்போடு வாழ்த்தினார். சமூக நீதி களத்தில் வீரியமாக செயல்படுவதற்கு அண்ணன் அவர்களின் வாழ்த்து எனக்கு பெரும் ஊக்கமாக அமையும் என்று நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

