நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக விசிக அறிவிப்பு!

நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் செயல்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடம் 1927 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது . இங்கு தற்போது பாதுகாப்பு குறைபாடு, இடவசதி ஆகியவை ஏற்பட்டுள்ளதன் காரணமாக, புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.ரூ. 970 கோடி ரூபாய் செலவில் நான்குமாடிக்கொண்ட முக்கோண வடிவிலான கட்டடமாக சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் புதிய நாடாளுமன்றம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வருகிற 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். திறப்பு விழா தேதியான மே 28 சாவக்கரின் பிறந்தநாள். அந்த தேதியை தேர்ந்தெடுத்ததிற்கும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அத்துடன் குடியரசுத் தலைவர் என்ற முறையில் திரௌபதி முர்முதான் நாட்டின் புதிய பாராளுமன்றத்தை திறந்து வைக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
#சாவர்க்கர் பிறந்தநாள் #மே_28 அன்று புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறக்கவிருக்கிறார் பிரதமர் @PMOIndia மோடி அவர்கள்.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) May 23, 2023
மாண்புமிகு குடியரசுத் தலைவர் @Droupati_Murmu அவர்களைப் புறக்கணித்துவிட்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வை நடத்துகிறார். இது சிங்காரித்து மனையில்… pic.twitter.com/N95XXV1yZq
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "#சாவர்க்கர் பிறந்தநாள் மே_28 அன்று புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறக்கவிருக்கிறார் பிரதமர் மோடி அவர்கள்.மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களைப் புறக்கணித்துவிட்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வை நடத்துகிறார். இது சிங்காரித்து மனையில் குந்தவைத்து மூக்கறுக்கிற கதையாகவுள்ளது. தனை விசிக சார்பில் கண்டிக்கிறோம். அத்துடன், இந்த நிகழ்வைப் புறக்கணிக்கிறோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.