"நாம் குறி வைக்கப்படுகிறோம்" - திருமாவளவன் வெளியிட்ட வீடியோ
திமுக கூட்டணியில் இருந்த போதும் கொச்சைப்படுத்தியவர்கள் தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற போதிலும் இழிவாக விமர்சிக்கிறார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
"நாம் குறி வைக்கப்படுகிறோம்" - விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட வீடியோ@thirumaofficial | #thirumavalavan | #vck | #dmk | #tvk | #VThamizhDigital | #VThamizh | #வி_தமிழ் pic.twitter.com/tkAzHmGrXV
— V Thamizh (@vthamizhdigital) June 26, 2026
இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வழக்கமாக இந்த களத்திலும் கூட... இத்தகைய சாதனையை படைத்தும் கூட... நாம் புறக்கணிக்கப்படுகிறோம் அல்லது கடுமையாக விமர்சிக்கப்படுகிறோம் என்ற நிலைதான் உள்ளது. இந்த புரிதலோடு நம்முடைய பயணத்தை வீரியத்துடன் முன்னெடுத்து செல்லவேண்டும். 2 சட்டமன்ற உறுப்பினர்கள், 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அங்கீகாரம் பெற்ற மாநில கட்சி. அனைத்து தரப்பு மக்களின் நன் மதிப்பையும் பெற்றுள்ள கட்சி. தி.மு.க கூட்டணியில் இருந்த போதும் நம்மை கொச்சைப்படுத்தினார்கள், இப்போது த.வெ.க அமைச்சரவையில் இடம்பெற்ற போதிலும் மிக இழிவாக விமர்சிக்கிறார்கள். நாம் குறிவைக்கப்படுகிறோம் என்பதுதான் இதன் பொருள், விடுதலை சிறுத்தைகளை பலவீனப்படுத்த பகைவர்கள் தீவிரமாக உள்ளனர்” என்றார்.

