"மாநில அரசு நீதித்துறை பயங்கரவாதத்துக்கு அஞ்சாமல் துணிந்து இதனை எதிர்கொள்ள வேண்டும்" - திருமாவளவன்

 
thirumavalavan

உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது மாவட்ட ஆட்சியரின் கடமைதான். ஆனால், நீதிபகளைப்போல மாவட்ட ஆட்சியர்கள் செயல்படமுடியாது என விசிக தலைவர் திருமாவளவன் கருத்து கூறியுள்ளார். 

Image

இதுதொடர்பாக திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில், "உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது மாவட்ட ஆட்சியரின் கடமைதான். ஆனால், நீதிபகளைப்போல மாவட்ட ஆட்சியர்கள் செயல்படமுடியாது. நீதிபதிகள் ஆவணங்களையும் ஆதாரங்களையும் சான்றுகளையும் சாட்சியங்களையும் அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றவர்கள் ஆவர்.  ஆனால், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அவ்வாறு செயல்பட இயலாது. மாநில அரசின் நிலைபாட்டினையும் கருத்தில் கொண்டே செயல்பட வேண்டியிருக்கும்.

உயர் அதிகாரிகளுக்கு ஆணையிடும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு. எனவே, மாநில அரசு நீதித்துறை பயங்கரவாதத்துக்கு அஞ்சாமல் துணிந்து இதனை எதிர்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் தமிழ்நாட்டு மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு திருப்பரங்குன்றத்தில் நீதியை நிலைநாட்ட உறுதிகுலையாமல் செயல்பட வேண்டும்"எனக் குறிப்பிட்டுள்ளார்.