“நீங்களும் ஒரு குழு அமையுங்க” - திருமாவளவன்

 
ட்ஃப்

கரூர் விவகாரத்தில் பாஜகவின் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடி தேவையாகவுள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கரூர் பலி: அரசியல் விளையாட்டைத் தொடங்கிவிட்டது பாஜக! - திருமாவளவன் Karur  stampede: BJP has started a political game! - Thirumavalavan

கரூர் மாவட்டத்தில் த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய பாஜக சார்பில் எம் பி ஹேமமாலினி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா அந்த குழுவை அமைத்தார். அந்த குழுவினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று கரூர் வந்த ஹேமா மாலினி தலைமையிலான குழுவினர் கரூர் மாவட்டத்தில் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர். 


இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில், “கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாகத் தொடங்கிவிட்டது பாஜக. கரூரில் நடந்த கொடூரத்தைப் பற்றி 'உண்மை கண்டறியும் குழுவை' அமைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதே ஆகும். இந்நிலையில் காங்கிரஸ் பேரியக்கமும் உடனடியாக இதுபோன்ற உண்மை அறியும் குழுவை நியமித்து கரூருக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம். பாஜக'வின் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடி தேவையாகவுள்ளது.எனவே, திரு.ராகுல்காந்தி அவர்கள், இது தொடர்பாக தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்களைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமித்திட வேண்டுமென விசிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.