திருப்பரங்குன்ற தூணில் தீபம் ஏற்றாத தவெக அரசுக்கு பாராட்டுக்கள் - திருமாவளவன்
வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோவிலருகே உள்ள தீபமண்டபத்தில் மகாதீபத்தை ஏற்றியுள்ள மதுரை மாவட்ட ஆட்சியருக்கும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகள் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோவிலருகே உள்ள தீபமண்டபத்தில் மகாதீபத்தை ஏற்றியுள்ள மதுரை மாவட்ட ஆட்சியருக்கும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகள். சங்பரிவார்களின் சதிமுயற்சியை முறியடித்து தமிழ்நாட்டில் சமூகநல்லிணக்கத்தைப் பாதுகாத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு விஜய் அவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
எத்தனை நெருக்கடிகளைத் தாண்டி இதனை சாதித்திருக்கமுடியும் என்பதை சங்பரிவார்களின் 'வலைபின்னல் அரசியல்' வலிமையை அறிந்தவர்களால் உணரமுடியும். ஆட்சிக்கு எத்தகைய நெருக்கடி வந்தாலும், தமிழர் மரபையும் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாப்பதில் உறுதியோடு செயலாற்றியுள்ள தவெக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உளமார்ந்த பாராட்டுகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

